உக்ரைனில் பதவி நீக்க சட்டம் நிறைவேற்றம்

தேசத்துக்கு துரோகம் செய்தால் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கம் செய்யும் விதமான சட்டம் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம் மூலம் அரச நிர்வாகத்தில் நிலவிவரும் இடர்பாடுகள் மற்றும் குறைகளைத் தீர்க்க மிகப்பெரிய அளவில் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் புதிய ஜனாதிபதியாக விளாடிமிர் ஜிலென்ஸ்கை கடந்த மே மாதத்தில் பதவியேற்றார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தேசத் துரோகத்தில் ஈடுபட்டால் ஜனாதிபதியைக் கூட பதவி நீக்கம் செய்யக்கூடிய வகையிலான சட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறித்த சட்ட வரைபை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, பல கட்ட விவாதங்கள் முடிவடைந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டவரைபு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் தேசத்துரோகம் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால் ஜனாதிபதியை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News