டொரியன் சூறாவளியினால் பலர் உயிரிழப்பு

பஹாமாஸை தாக்கிய டொரியன் சூறாவளியினால் இரண்டாயிரத்து 500 பேர் காணாமல் போயுள்ளனர்.

பஹாமாஸின் அவசர சேவைப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், டொரியன் புயல் தாக்கம் காரணமாக 50 இற்கும் மேற்பட்டோர்   ந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்காணவர்கள் பஹாமாஸை விட்டு வெளியேறியுள்ளனர்.

பேரழிவுக்கு உள்ளான தீவில் இருந்து ஆயிரக்கணக்காணவர்கள் வெளியேற காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புயல் தாக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிரேட் அபாகோ மற்றும் கிராண்ட் பஹாமா ஆகிய தீவுகளில் இருந்து பலரும் வெளியேறக் காத்திருப்பதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

About Thinappuyal News