அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சாண்டி

43

விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிக்பொஸ்  3க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் கலந்துகொண்டு இரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றார்.

தற்போது பிக்பொஸ் நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் லொஸ்லியாவின் அப்பா – அம்மா மற்றும் அவரது சகோதரிகள் ஆகியோர் பிக்பொஸ் வீட்டுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள ப்ரமோவில் தர்ஷனை பார்க்க அவருடைய அம்மா மற்றும் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குடும்பத்தை பார்த்ததும் தர்ஷன் மிகுந்த உற்சாகத்தில் அம்மாவை கட்டித்தழுவியதுடன்,  பின்னர் அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சாண்டி கூற கேக் வெட்டி தர்ஷனின் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

SHARE