‘அஜித் 60’ படத்தில் அனிகா

18

நடிகர் அஜித்தின் 60வது படத்தில் அனிகா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் பெரும்பாலான இரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ‘அஜித் 60’ படத்தில் அனிகா இணைந்திருப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. விரைவில் ‘அஜித் 60’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE