புதையல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது

27

கலேவெல பகுதியில் மிக சூட்சுமமான முறையில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புற – பட்டிவெல பகுதியில் நேற்று இரவு 11.50 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மாதிபொல , அம்பேபுஸ்ஸ , நவஹெட்டிய, குருநாகலை , உடஹொரொம்புவ , மாவத்தகம , கலேவெல மற்றும் ஹிங்குரங்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 49 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து தண்ணீர் மோட்டார் , 7 டெட்டனேட்டர்கள், 2 ஜெலட்னைட்கள், 3 கிலோ கிராம் அமோனியா மற்றும் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE