பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்

12
பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்- ஜி.வி.பிரகாஷ் படம் குறித்து ஹர்பஜன் டுவிட்
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ், காஷ்மீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியானள படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.  இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக திவ்ய பாரதி நடிக்கவுள்ளார். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். ‘பேச்சிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.
பேச்சிலர் பட போஸ்டர்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தொடர்பாக ’கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்… கமிட் ஆனா உம்முனு இருக்கனும்… பேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்… பேச்சிலர் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
SHARE