போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்மானத்திற்கு மக்கள் ஆதரவு

11

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எண்டர் பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89 வீதத்தினர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE