ராஜிதவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருகோணமலை வைத்தியர்கள்

26

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (12) 12.50 ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 1.15 வரை இடம்பெற்றது.

ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கிற்கு வைத்தியர்களின் அதீத தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெரிவித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“வடக்கு கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா”

“வைத்தியர்களிடம் மாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்”

போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வசனங்களை உபயோகித்து வைத்தியர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 45 வைத்தியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE