இலங்கைய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா

14

இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் உள்விவகாரம் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஏஎல்ஏ அசீஜ்  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  சவேந்திரசில்வாவின் நியமனம் குறித்து சில நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய  இராணுவதளபதியாக சவேந்திரசில்வாவை நியமிப்பது என்பது இலங்கையின் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகள் தொடர்பான உள்ளக நிர்வாக நடைமுறைகள் மீது வெளிச்சக்திகள் செல்வாக்கு செலுத்த முயல்வது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்தூதுவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்த நியமனம் தொடர்பில்  இலங்கையின் சில இருதரப்பு சகாக்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனைகளை வெளியிட்டுவருவது கவலையளி இயற்கை நீதி தொடர்பான கொள்கைகளிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE