கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம்

16

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 1, 2 மற்றும் 3 பகுதிகளில் உள்ள காணி மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

துறைமுக நகரத்தில் சேவை மற்றும் தொழில் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் வருபவர்கள் தங்குவதற்காக தேவைப்படும் வசதி காரணமாக இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவ்வாறு வருபவர்களுக்கு தங்குமிட வசதி வழங்குவதன் மூலம் தாம் இலாபத்தை ஈட்ட முடியும் என அந்த பகுதியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் தங்களின் வருமானம் அதிகரிக்கும் என குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

SHARE