Come Back With டோனி

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை தொடர்ந்து டோனியின்  ஓய்வு குறித்து ரசிகர்கள் மத்தியில் கலக்க நிலை தோன்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2016  ரி20 உலக கிண்ண போட்டி குறித்து டுவிட்டரில் பதிவுசெய்துள்ள விராட்கோலி அந்த போட்டியை மறக்க முடியாது டோனி அன்று என்னை உடற்தகுதி பரிசோதனை செய்பவர் போல ஓடவைத்தார் என கோலி தெரிவித்துள்ளார்.

என்னால் ஒருபோதும் மறக்க முடியாத போட்டியது,இந்த மனிதர் என்னை உடற்பரிசோதனைக்கு உட்படுத்துபவர் போல ஓடவைத்தார் என தெரிவித்துள்ள விராட்கோலி அந்த போட்டியின் படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் விராட் கோலி என்ன சொல்லவருகின்றார் டோனியின் ஓய்வு குறித்து மறைமுகமாக தெரிவிக்கின்றாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டோனி ஏன் இதனை பதிவு செய்தார் டோனி ஓய்வுபெறுகின்றாரா என பலரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டோனி தனது ஓய்வு குறித்து தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில்  விராட்டிற்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என முபாடல் வொஹ்ரா என்பவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் டோனியை நேசிக்கின்றோம் டோனி தயவு செய்து ஓய்வுபெறவேண்டாம் என ரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை விராட்கோலியின் இந்த பதிவு டோனி மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட வருவார் என்பதை தெரிவிக்கின்றது  எனபதிவு செய்துள்ள மற்றுமொரு ரசிகர் விக்கெட்களிற்கு இடையில் வேகமாக ஓடுவதற்கு தயாராகயிருப்பதை தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை,அவர் மீண்டும் விளையாடுவதை எங்களால் பார்க்க முடியாமல் போகலாம் என தெரிவித்துள்ள ரொசான் ரோய் என்பவர் ஓய்வின் போது கூட டோனி அமைதியாக காணப்படுவார் சிரித்துக்கொண்டு வெளியேறுவார் என தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News