ஜமைக்காவில் நடைபெற்ற அணிகளுக்கான பலப்பரீட்சை

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 9ஆவது லீக் போட்டியில் சென் லுசியா ஸ்சுக்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ஜமைக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சென் லுசியா ஸ்சுக்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென் லுசியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கிளென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களையும், ரொவ்மன் பவல் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஒபேக் மெக்கொய் மற்றும் பவாட் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், திசர பெரேரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென் லுசியா அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென் லுசியா அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது சென் லுசியா அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக ராகீம் கோர்ன்வோல் 75 ஓட்டங்களையும், ஹென்ரி பிளெட்சர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஒசேன் தோமஸ் 3 விக்கெட்டுகளையும், ஷாமர் ஸ்பிரிங்கர் மற்றும் ராமால் லீவிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராகீம் கோர்ன்வோல், தெரிவுசெய்யப்பட்டார்.

About Thinappuyal News