உந்து விசையினால் வேகம் குறைகந்த விண்கலம்

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியானது நாளை (சனிக்கிழமை) நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதன்படி நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் குறித்த கருவி தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவில் விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை ஆரம்பிக்கவுள்ளது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு கடந்த மாதம் 14ஆம் திகதி புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

அத்துடன் கடந்த 2ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

நேற்று முன்தினம் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News