வியாபாரக் கறுப்பு பட்டியலில் இடம்பெற்ற ஹுவாவி

16

இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் ஹுவாவி தொலைப்பேசிகளில் கூகுள் Application ஐ பயன்படுத்த முடியாது என ஹுவாவி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹுவாவி நிறுவனம் அமெரிக்காவின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் கூகுள் நிறுவனமும் ஹுவாவி நிறுவனத்திற்கு வழங்கிவந்த அன்ரோயிட் இயங்கு தளத்தின் அப்டேட்டினை நிறுத்தியிருந்தது.

இதனையடுத்து ஹுவாவி நிறுவனம் தனக்கென இயங்குதளம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இந்த இயங்குத்தளத்தில் கூகுளின் கூகுள் மேப், யூடியூப் உள்ளிட்ட எந்த Applicationகளையும் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கூகுள் Applicationகள் இன்றி உருவாகும் இந்த தொலைப்பேசிகள் விற்பனையில் சரிவை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE