கூகுள் மூலம் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்கள்

15

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் ஒளிப்படங்களை பிடிஎப் ஆக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.

அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இவை காணப்படுவதுடன் இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் ஒளிப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் .

பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூகுளுக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து கேம் ஸ்கேனர் (CS Camscanner) செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மால்வேர் தாக்குதல் Android பதிப்பில் (Version) மட்டுமே இருப்பதாகவும், ஐஓஎஸ் பதிப்பில் வழக்கம்போல் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம் ஸ்கேனர் செயலியில் வணிக வருவாய்க்காக ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட இரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் (Optical Character Recognition) மூலம் தொலைபேசி இலக்கம்  வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும் அறிவுறுத்தியது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது.

அண்மையில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கமரா, பாப் கமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் (One Stroke Line Bus) உள்ளிட்ட 80க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியயுள்ளது.

 

SHARE