சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி

17

தென்னாபிரிக்காவில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியான பாலியல் வன்முறை சம்பவங்களும்  பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து பெண்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  பல பாலியல் வன்முறை சம்பவங்களும்  கொலைகளும் இடம்பெற்றுள்ளன.

ஜனிகாமலோ என்ற 14 பாடசாலை மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்முறையின் பின்னர் மாணவியின் தலையை கல்லில் அடித்து கொலை செய்துள்ளமை உறுதியாகியுள்ள போதிலும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

இதேபோன்று 19 வயது ஊடகதுறை மாணவியொருவர் தபால் அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதேபோன்று மற்றுமொரு மாணவி அவரது படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவின் குத்து சண்டை வீராங்கனை முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இதேபோன்று குதிரை ஓட்டபந்தய வீராங்கனை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடாபில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து தென்னாபிரிக்க மக்கள்  கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் டுவிட்டரிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

டுவிட்டரில் பலர் கடந்த சில மாதங்களில் காணாமல் போன பெண்கள் சிறுமிகளின் படங்களை வெளியிட்டு விபரங்களை கோரி வருகின்றனர்.

தென்னாபிரிக்க பெண்கள் தாங்கள் சந்தித்த அவலங்களையும் பதிவு செய்துவருகின்றனர்,மேலும் தங்கள் அச்சங்களையும் கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பெண்புகைப்பட கலைஞர் ஒருவர் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நான் பாலியல் வன்முறைக்கு உள்ளானே; தற்போது எனது பெண் பிள்ளைகளின் நிலை குறித்து அச்சமடைந்துள்ளேன் என குறிப்பி;ட்டுள்ளார்.

சரா மிட்கிலே என்ற பெண்மணியே இதனை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கான போதியளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE