அடிக்கடி இடம் பெறும் ரயில் விபத்து

16

50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு மனிதாபிமான விவகாரங்கள் அமைச்சர் ஸ்டீவ் எம்பிகாய் தெரிவித்துள்ளார்.

கொங்கோவின், தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான டான்கெனிகா என்ற இடத்திலேயே மேற்படி ரயில் விபத்தானது அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

SHARE