படகு கவிழ்ந்ததில் 11 பலி

12

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் ஏரியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போபாலில் உள்ள கட்லாபுரா பகுதியில் உள்ள ஏரியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் சிலையை கரைக்க சிலர் படகில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு ஏரியில் இவ்வாறு அனர்த்தம் சம்பவதித்துள்ளது.

இதில் படகில் இருந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்னர்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனத் தெரிவித்த படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள‍ை முன்னெடுத்துள்னர்.

SHARE