கேரளா கஞ்சாவுடன் 4 பேர் கைது

19

திருகோணமலை  பொலிஸ் பிரிவில் கேரளா கஞ்சா வைத்திருந்த  நால்வரை இன்று (13)வெள்ளிக் கிழமை அதிகாலை 12.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை லிங்க நகர் பகுதியில் வைத்து கேரளா  கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 1500  கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருகோணமலை மட்கோ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 1400 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருகோணமலை 03 ஆம் கட்டை பகுதியில்  வேன் ஒன்றில் கேரளா கஞ்சா கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வாகன சாரதியிடமிருந்து 1365, கிராமும், மற்றுமொருவரிடம் 1350 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும், இவர்கள் நால்வரும், மன்னார் சிலபாத்துறை , உப்புக் குளம் பகுதியைச் சேர்ந்த 27, 28, 24,24 வயதுடையவர்கள் எனவும்  பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சந்தேக நபர்கள் நால்வரையும், இவர்களிடமிருந்து   கைப்பற்றப்பட்ட  கேரளா கஞ்சாவை திருகோணமலை தலைமையாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE