சிறப்பாக விளையாடும் வீரர்களே உலகக்கிண்ண தொடரில் வாய்ப்பு

25

முத்தரப்பு ரி-20 தொடரின் முதல் போட்டியில், பங்களாதேஷ் அணியும், சிம்பாப்வே அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நாளை (சனிக்கிழமை) டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பங்களாதேஷ் அணிக்கு சகிப் ஹல் ஹசனும், சிம்பாப்வே அணிக்கு ஹெமில்டன் மசகட்சாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இப்போட்டி தொடரை பொறுத்தவரை, எதிர்வரும் ஆண்டு உலகக்கிண்ண ரி-20 தொடருக்கு முன்னோட்டமாக நடைபெறவுள்ளது.

ஆகையால் இத் தொடரில் நடைபெறும் போட்டிகள், வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டிகளாக அமையவுள்ளது.

இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே, உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை தக்கவைப்பார்கள்.

எதிர்பார்ப்பு மிக்க இந்த முத்தரப்பு ரி-20 தொடரில், பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE