இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இருதரப்புப் பிரதிநிதிகளும் இணக்கம்

17

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண இருதரப்புப் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – இந்திய, மீனவர் நெருக்கடி பற்றி இந்தியப் பாராளுமன்ற குழுவினருக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இந்த பேச்சுரவார்த்தையின் போதே இணக்கம் காணப்பட்டது.

இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிரதிநிதியும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சார்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE