ஆட்சி என்னும் சொல்லுக்கு ஆதிகாலத்திலிருந்தே எதிர்ப்பு

24

ஆட்சி என்னும் சொல் மனிதனுக்கு பரிச்சயப்பட்ட ஆதிகாலத்திலே இருந்து எதிர்ப்பு என்பதும் இருந்திருக்கிறது. எங்கெல்லாம் அரசுகள்/தலைவர்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில் இப்படியான புரட்சிகள் நடந்திருக்கின்றன. இந்த புரட்சிகளை எல்லாம் இரண்டு வகையான பிரிவுகளில் அடக்கிவிடலாம். ஒன்று வன்முறை சார்ந்த போராட்டம். அடுத்தது அமைதிவழிப் போராட்டம்.

A Kashmiri protester throws a stone towards Indian police during a protest in Srinagar
இதில் அமைதிவழிப் போராட்டமே அதிக அளவில் வெற்றியைப் பெறுவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று தெளிவுபடுத்துகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் எரிகா செனோவத் என்பவர் கடந்த நூற்றாண்டு முழுவதும் நடந்த புரட்சிகளைக் கணக்கில் கொண்டு பிரம்மாண்ட ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார். இதில் வன்முறைப் போராட்டங்களை விட அமைதிவழிப் போராட்டங்கள் இருமடங்கு வெற்றியைத் தருவதாக சொல்கிறார் எரிகா.
iraqi_protesters_burn_tires_and_block_the_road_at_the_entrance_to_the_city_of_basra._afp

மொத்தம் 323 போராட்டங்களை இவர் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கிறார். புரட்சி துவங்கிய, பயணித்த விதம், ஈடுபட்ட மக்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் குறைந்தபட்சம் ஓராண்டுக்குள் போராட்டம் இலக்கை அடைந்திருந்தால் அவை வெற்றிபெற்றதாக கருதப்பட்டிருக்கின்றன. ஆயுதம் ஏந்திய மக்களின் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில் 23 சதவிகித வன்முறைப் போராட்டங்கள் வெற்றி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் அமைதிவழி போராட்டங்களில் 53 சதவிகிதம் வெற்றி வாய்ப்பை பெற்று உள்ளன.

3.5% ரூல்

எரிகா முன்வைக்கும் முடிவுகளில் முக்கியமானது 3.5% ரூல் ஆகும். அதாவது அமைதி வழி போராட்ட்டத்தில் அந்த நாட்டின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் கலந்துகொண்டால் நிச்சயம் அந்த போராட்டம் மக்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அதேபோல அமைதிவழி போராட்டங்களில் சேரும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சமகாலத்தில் இப்படி அதிகார வர்க்கத்தை அசைத்துப்பார்த்த போராட்டங்களுக்கு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1986 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் மற்றும் அல்ஜீரியாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஆகியவை எடுத்துக்காட்டுகளாக கூறப்படுகின்றன. ஆக மக்களை திருப்திபடுத்தாத அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசும் நிச்சயம் மக்களால் துடைத்தெறியப்படும் என்பது தெளிவாகிறது.

SHARE