தூங்கும் போது உடல் வளர்ச்சி மாற்றம் நடைபெறும்

27
இன்றைய காலக் கட்டத்தில் உடல் எடையை குறைக்க தான் பலர் படாத பாடுபடுகின்றனர். அப்படி எவ்வளவு முயற்சித்தும் குறைக்க முடியாத உடல் எடையை வளர்சிதை மாற்றத்தை அதாவது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் மூலம் குறைக்கலாம் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். சரி இது உண்மையா? வளர்சிதை மாற்றத்தை நம்மால் அதிகரிக்க முடியுமா? இதை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம் என்பது நமது உடலில் எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தும் ஒரு வேதியியல் செயல்முறை. நாம் உண்ணும் உணவை எனெர்ஜியாக மாற்றி நம்மை உயிரோடு வைத்திருக்கும் செயல்முறை. அதாவது உங்கள் உடல் செயல்படுவதற்கான என்ஜின் என்று கூறலாம். இந்த வளர்சிதை மாற்றம் நடக்க அதுவும் நாம் உயிர் வாழ தேவையான அடிப்படையான செயல்முறை மட்டும் நடக்கவே நமக்கு 70 சதவீத எனர்ஜி தேவை. நீங்கள் தூங்கும் போது கூட வளர்சிதை மாற்றம் இயக்கத்தில் தான் இருக்கும்!! இது தான் அடித்தள வளர்சிதை மாற்ற விகிதம் எனப்படும்.

நீங்கள் தூங்கும் போது கூட வளர்சிதை மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கும்!!

சரி வளர்சிதை மாற்ற விகிதத்தை எப்படி அளவிடலாம்? நம் உடல் வெளிப்படுத்தும் வெப்பத்தை வைத்தோ அல்லது நாம் சுவாசத்தின் மூலமாக வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை கண்காணித்து தான் இதை அளவிட முடியும்.

Weight

அடுத்து, இந்த  வளர்சிதை மாற்றம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுமா என்று கேட்டால் ஆம் வேறுபடும்! ஒரே எடையில் உள்ள இருவரிடம் கூட வேறுபடும்.
எடுத்துக்காட்டாக உடல் எடை சமமாக உள்ள இருவரில் ஒருவரது உடலில் கொழுப்பு நிறை 50% மற்றும் உடல் நிறை (தசை, எலும்பு, ரத்தம்,தோல் மற்றும் உறுப்புகளின் எடை) 50%. இதுவே இன்னொருவரின் உடலில் கொழுப்பு நிறை  15% மற்றும் உடல் நிறை 85% என்றால் கொழுப்பு நிறை குறைவாக இருப்பவருக்கு தான் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகம். ஏனென்றால் உடலில் உள்ள கொழுப்பு இல்லாத மற்ற மெல்லிய திசுக்களில் தான் வளர்சிதை மாற்றம் அதிகமாக நடக்கும். அதாவது கொழுப்பை விட தசைகள் தான் அதிக கலோரிகளை எரிக்கும்.

மாற்ற முடியுமா?

வளர்சிதை மாற்ற விகிதம் உங்கள் உயரம், உங்கள் பரம்பரையான ஜீன்கள் மற்றும் நீங்கள் ஆணா பெண்ணா என்பது போன்ற மாற்ற முடியாத காரணிகளை பொறுத்தது.

அப்படி என்றால் இதை அதிகரிக்க வழியே இல்லையா என்றால் இருக்கிறது! கொழுப்பு நிறையை குறைத்தால் இது முடியும். இதற்கு சரியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். உடல் செயல்பாட்டை அதிகரிப்பது அதாவது உடற்பயிற்சி போன்றவை நல்ல பலனளிக்கும். நொறுக்கு உணவுகளுக்கு பதில் காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள் சாப்பிடுவதும் உடற்பயிற்சியும், காலை உணவை தவறாமல் சாப்பிடுவதும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.வயதாக வயதாக வளர்சிதை மாற்றம் குறைய தொடங்கும்!!

அதே சமயம் தூக்கத்தை குறைப்பது மிகவும் தவறு. உடற்பயிற்சி செய்து சரியாய் உணவு பழக்கம் இருந்தாலும் கூட தூக்கத்தை குறைத்தால் வளர்சிதை மாற்றம் சரியாக நடக்காது. மற்றொரு முக்கிய காரணம் மன அழுத்தம். Cortisol என்னும் மன அழுத்தம் ஹார்மோன் உங்கள் எடையை கூட்டிவிடும்.

ஆனால் வளர்சிதை மாற்ற விகிதம் பரம்பரை ஜீன்கள் சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக எல்லாம் மாற்றி விட முடியாது. நீண்ட கால கால முயற்சி மட்டுமே  கை கொடுக்கும். ஒரே நாளில் ஒன்றும் மாறிவிடாது என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

அதே சமயம் வயதாக வயதாக வளர்சிதை மாற்றம் குறைய தொடங்கும். இதற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. வயதாகும் போது நாம் ஆக்டிவாக செயல் பட மாட்டோம் என்பதால் கூட இப்படி இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் அப்படி குறைய தொடங்கும் வளர்சிதை மாற்றம் மிகவும் குறைந்த அளவில் தான். அதனால் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.

man doing exercise

முயற்சியை விடாதீர்கள்

அடுத்ததாக இப்படி அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதத்தை தக்கவைத்து  பராமரிப்பது தான் மிக முக்கியம்!! ஏனென்றால் பொதுவாக மனித உடல் இயற்கையாகவே அதன் எடையை அப்படியே பராமரிக்க தான் முயற்சி செய்யும். ஒருவேளை ஒருவர் உடல் எடையில் 10 முதல் 15 சதவீதம் எப்படியோ குறைத்து விட்டால் Persistent metabolic adaptation என்ற நிலை அவருக்கு ஏற்படும். இதன் படி உடல் வளர்சிதை மாற்றம் மெதுவாகி, பசியை அதிகப்படுத்தும். ஏனென்றால் உடல் எது உங்கள் இயல்பான எடை என நினைக்கிறதோ அந்த எடையை மீண்டும் அடைய போராடும். இதனால் தான் உடல் எடை மீண்டும் கூடி விடுகிறது.

நீங்கள் உடல் எடையை கொஞ்சம் குறைத்து விட்டீர்கள் என்றால் அப்போது தான் உண்மையான சவாலே. Persistent metabolic adaptation நிலை படி வளர்சிதை மாற்றம் குறையாமல் இருக்க நீங்கள் எப்போதும் ஆக்டிவ் ஆகவும் அதிக உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

SHARE