பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

31

எதிர்வரும் வருடம் டிசம்பர் மாதம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக ஆட்பதிவு திணைக்களம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அடையாள அட்டை இல்லாத மாணவர்கள் 0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதனை பெறுவதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

SHARE