நாட்டிற்குப் பொருத்தமான உடன்படிக்கைகளை மாத்திரம் செய்து கொள்ளப்படும் – சஜித்

53

நாட்டை அபிவிருத்தி செய்வதன் பிரதான வழிமுறையாக நாட்டின் கல்வித்துறை அமைவதாக ஜனாதிபதிவேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கொள்கைத்திட்டம் அமைக்கும் போதும் அதனை அமுல்படுத்தும் போதும் தகைமை பெற்ற நிபுணர்களின் பங்குபற்றுதலைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சர்வதேச ரீதியிலான கல்வி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

பல்கலைக்கழக கலாநிதிகளுக்கான மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

தனது தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்குப் பொருத்தமான உடன்படிக்கைகளை மாத்திரம் செய்து கொள்ளப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

அதன்போது சரியான தீர்மானம் எடுப்பதற்கு நிபுணர்கள் மற்றும் புலமை சார்ந்தவர்களின் அபிப்பிராயங்களைப் பெறவுள்ளதாக அவர் கூறினார்.

மீள் உற்பத்தி ஊடான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்நுட்ப நகர் ஒன்றை நாட்டில் உருவாக்குவதற்குப் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன் கீழ் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அத்துடன் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

SHARE