இந்தியாவின் RSS இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக களமிறக்கம்

80

இலங்கையினுடைய புலனாய்வுக் கட்டமைப்பானது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லது சென்றுவிட்டது என்றுதான் கூறவேண்டும். புலனாய்வுக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புகின்ற போதுதான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படும். இதனை தற்போது இலங்கையின் புதிய ஜனாதிபதியா கத் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிபீட மேறியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எமதும் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நாட்டில் சர்வதேச அதாவது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளது புலனாய்வுக் கட்டமைப்புக்களும் களமிறங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. RSS கள மிறக்கப்பட்டிருக்கிறது. இதனை விட விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்திலே இவர்கள் ஆடை வியாபாரிகளாக நாட்டிற்குள் களமிறக்கப்பட்டு அனைத்துத் தரவுகளையும் எடுத்துக் கொண்டி ருந்தார்கள். இவர்களை இலங்கைப் புலனாய்வினரும், இராணுவத் தினரும் ஏனோ தானோ என விட்டுவிட்டிருந்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு வரும் ஆடைகளை 1000, 2000 ரூபாய் என யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்பதன் ஊடாக இந்தியாவினுடைய நேரடி ஒப்பந்தத்துடன் தான் இவ் புலனாய்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானவர்கள் தான் மிகத் துல்லியமான தகவல்களை வழங்கி இந் நாட்டில் விடுதலைப் புலிகளுடைய யுத்தம் மௌனிப்பதற்கும் காரண மாக இருந்தார்கள். போராட்டம் மௌனித்ததற்குப் பல கார ணங்கள் இருந்தாலும் பிரதான மானதாக இது அமைகிறது.

அமெரிக்காவினுடைய CIA உலக சந்தையில் ஆயுத விற்பனைகளை ஏற்படுத்தும் வகை யில் தான் செயற்படுகிறார்கள். ஏதோவொரு வகையில் நாடுக ளில் யுத்தம் என்ற ஒன்று நடைபெற்றுக கொண்டிருக்க வேண்டும் என்பதுவே அவர்களின் நிலைப்பாடு. அதை விட இந்தியா, சீனாவினு டைய வர்த்தக, பொருளாதார விடயங்களை மீறி இந்நாட்டில் தமது வர்த்தக, பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை அதிகரிக்கவேண்டும் என்கிற நிலைப்பாடு இருக்கிறது.

தொடர்ச்சியாக இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் இந்தியா தனது சுயநலம் கருதியே ரெலோ, புளொட், விடுதலைப் புலிகளை தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். இலங்கையரசுக்கு எதிராக மோதவிட்டார்கள். அதன் பின்னர் இலங்கை அரசுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு ஆயுதக் கட்சிகளை மழுங் கடிக்கின்ற செயற்பாட்டில் இறங்கினார்கள்.

தற்போது யுத்தம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இந்நாட்டில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய விட யம். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும், முன்னாள் பிர தமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் பொறுப்புக் கூறவேண்டும். காரணம் இவர்களது ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையின் புலனாய்வு என்பது மிகவும் தளர்வுற்ற நிலை யில் இருந்தது. அது தற்போது கட்டியெழுப்பப் படுகின்றதா என்றாலும் கேள்விக்குறி தான்.

இலங்கையின் பல புலனாய்வு கட்டமைப்புக்களில் முஸ்லீம்கள் பலரும் பணி புரிகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை தமது இனத்திற்கு ஆபத்து ஒன்று ஏற்படுத்தப் படுகிறபோது அவர்களது உள் மனது பாதிக்கப்படும். அதில் மாற்றுக்கருத்தில்லை. முஸ்லீம் தரப்பினர் புலனாய்வு கட்டமைப்புக்களில் உயர் பதவி யில் இருந்தாலும் அவர்களது மனதில் ஒரு வேதனை தான் உருவாகும். தற்போது முஸ்லீம் அரசியல்வாதிகளும் அரசினால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் தரப்பானது மீண்டும் ஆயுதமேந்தி தாக்குதலை நடாத்த முடியாது. நடைபெற்று முடிந்த தாக்குதலுடன் அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புலனாய்வுக் கட்டமைப்பை துரி தப்படுத்துவதிலும் அதற்கு ஒரு அஸ்திவாரம் இட்டு நடவடிக் கைகளை செயற்படுத்துவதிலும் துரிதமாக இருக்கிறார்.

யுத்தம் ஒரு கொடூரமான விளைவினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த யுத்தத்தினால் தமிழ் பேசும் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள மக்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழினத்தின் மீது ஒரு இனவழிப்பு செய்யப்பட்டதாக ஐ.நாவிலும் பதிவாகியிருக்கிறது. இதேநேரம் இந்த சர்வதேச ரீதியாக வரும் அழுத்தங்களிலிருந்து இலங்கை அரசு தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் இந்த சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்படவேண்டிய நிலைதான் இருக்கிறது.

அமெரிக்கா சந்தர்ப்பம் சூழ்நிலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இலங்கையின் மீது எப்போது போர் தொடுக்கலாம் என்று அல்லது இந்தியா சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது போரைக் கட்டவிழ்த்து விடலாம் என்று. ஏனெனில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்ததன் விளைவு உண்மையில் அரசாங்கம் ஏன் இவ்வாறு செய்தோம் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது.

ஒரு நாட்டினுடைய தேசி யப் பாதுகாப்பு கட்டமைக்கப் படவேண்டுமாக விருந்தால் புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அமெரிக்காவின் பென்டகன் தாக்குதலில் பின்னர் அவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தற்போது அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள்.
சீனாவும் அவ்வாறுதான்.

இலங்கையில் பகுதி பகுதியாக புலனாய்வினர் பணியாற்று கின்றனர். அவர்களுக்கு ஒத்தாசையாக தமிழ் தரப்பினர் சுமார் 1500இற்கும் மேற்பட்டவர்கள் செயற்படுகிறார்கள். ஆனாலும் இக் கட்டமைப்பினரால் துரித கதியிலான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போயிருக்கிறது என்பது உண்மைதான்.

SHARE