தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது

142

 

விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிரா கவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.

விடுதலைப்புலிகளுடனான 2001- 2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவக் கட்டளைத்தளபதி கருணா அம்மானை, இலங்கையரசு மிக சுலப மாக உல்லாச வாழ்க்கைக்குள் அவரை உள்வாங்கி, வடகிழக்கு என்கின்ற பிரிவினைவாதத்தினை உருவாக்கி, பிரபா – கருணா பிரிவிற்கு வழியமைத்தது.
அதனைத்தொடர்ந்து விடுத லைப் புலிகளின் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம் என்பதற்கு இடமளிக்காதவகையில் தமிழ்மக்களின் கலை, கலாச்சாரம் மாற்றப்பட்டு அல்லது மாற்றியமைக்கும் நிகழ்ச்சிநிரலை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் அதே நேரம், தமிழ்த்தேசியத்திற்காக, தமிழர் போராட்டத்திற்காக ஊடகங்களுக்கு குரல்கொடுத்துவந்த ஊடகவி யலாளர் டி.சிவராம், பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிகரன், ஊடகவியலாளர் நிமலராஜன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க, ஊடகவியலாளர் சுகிர்தரன் ஆகி யோர் அக்காலகட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக் கொலைகளின் பின்னணியாக கருணா குழுவினரையே அரசு பயன்படுத்தியது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பி னூடாக, அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரத்தினம், பத்மினி ஆகி யோர் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ள அதேநேரம், அவர்களுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் ஆசனங் கள் ஒதுக்கப்படாததன் காரண மாகவும், ஒருசிலர் அரசுடன் இணைந்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுவும் அரசிற்கு ஒரு வெற்றியாகவே அமையப்பெற்றுள்ளது. தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் இனியபாரதி மாநகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விடயமானது மக்கள் மத்தியில் பெரும்விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கருணா குழுவில் இருந்துகொண்டு, ஆட்கடத்தல், துஷ்பிரயோகங்கள், கொலைகள் போன்ற பெரும் அடாவடித்தனங்களை செய்துவந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழ்த்தேசியத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் யார் யார் எதிரிகளாக செயற்பட்டார்களோ அவர்களை இப்பொழுது அரசு உள்வாங்கிக்கொண்டுள்ளது மட்டு மன்றி, அவர்கள் மூலமா கவே தமிழ்மக்களுக்கெதிரான செயற்பாடுகளை திட்டமிட்டபடி அரசு நடத்திவருகிறது. இதனை இவர்கள் விளங்கிக்கொண்டாலும் கூட, தமது சுயநலத்திற்காக செயற்பட்டுவருகின்றார்கள்.

இனிவரும் காலங்களில் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டம் என்பது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனைப்போன்று எவராலும் மனஉறுதியுடன் போராட வாய்ப்பில்லை. அஹிம்சை வழியிலான போராட்டங்களை தமிழ்மக்களாகிய நாம் பழைய குரோதங்களை மறந்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணை ந்து செயற்படுவதனூடாக தமிழ்மக்களுக்கான தனித்தேசியத்தை வலுப்படுத்தமுடியும். அத்துடன் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதோடு, பெரும்பாலான அமைச்சுப்பதவிகளையும் கைப்பற்றி, வடகிழக்கில் சுமுகமான நிலவரங்களை உருவாக்கமுடியும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும். ஒரு வரையொருவர் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து, நானே குற்றவாளி என உணர்ந்துகொண்டு செயற்படுவது சிறந்ததாகும்.

ஆகவே தமிழ்க்கட்சிகள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும். தமிழினத்திற்கெதிராக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவருகின்றன. உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் போராட்டம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காரணம் 52 பயங்கரவாத நாடுக ளுள் தரை,வான்,கடல் மற்றும் கரும்புலிகள் போன்ற படைகளை கொண்டிருந்த நாடு இலங்கை என்ற பெருமையை, விடுதலைப்புலிகள் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். மற்றுமொரு ஆயுதமேந்திய போராட்டம் என்பது தற்போதைய காலத்தில் சாத்தியமற்றதொன்று. தற்போதைய காலகட்டத்தில் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. போர்க்கால சூழலில் உள்ள நிலை தற்போது இல்லை.

விடுதலைப்புலிகளின் யாழ் அரசியற் பொறுப்பாளர் தியாகி திலீபன் கூறியதைப்போன்று, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமி ழீழம் மலரும் என்பது போல், தமிழ்மக்கள் வாழ்வில் சுதந்திரம் மலர்ந்தால் அதுவே நலமாகவிருக்கும். அவற்றினை பிளவுபடுத்தும் வகை யில் தற்போதைய மோடி அரசுடன் இணைந்து இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் அரசியல்வாதிகள் என செயற்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்க்கட்சிகளாகிய எவரும் துணை போகாது தமிழி னத்தின் சுதந்திர வெற்றிக்கு உழைப்பதன் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவே அரசாங்கத்தின் அபாயவலைக்குள் சிக்காது, தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கும் வகையில் சிந்தித்துச் செயற்படுங்கள். அதுவே தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ வழியமைக்கும்.

நீண்ட கால தமிழ் மக்களின் விருப்பமாகவிருந்த சுயநிர்ணய உரிமை இதுவரைகாலமும் எந்த அரசினா லும் வழங்கப்படவில்லை. இது மிக வும் வேதனைக்குரியவிடயமாகும். காலத்திற்குக் காலம் அரசுகள் மாற்றம் பெற்றதே தவிர, தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரும் நோக்ககோடு செயற்படவில்லை. இறுதியாக பார்க்கின்றபொழுது, தமி ழீழ போராட்ட வரலாற்றில் கருணாவின் காட்டிக்கொடுப்பே இப்போராட்டத்தை வேறு திசையில் திருப்பியது என்று கூறலாம்.

ஆனால் இன்று கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா மற்றும்; ஏனைய போராளிகள் போன்றவர்களைப் பார்க்கின்றபொழுது, அரசினால் ஏணிகளாகப் பயன்படுத்தப்பட்டு, ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீயாரோ நான்யாரோ என்கின்ற நிலையில் தான் அரசு செயற்படுகிறது.

இன்னும் 05 வருடங்களின் பின் அனைத்து இயக்கங்களையும், சிங்கள இனவாதக் கட்சிகள் அல்லது அதற்கு ஆதரவான கட்சிகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக ஏனைய இயக்கங்களும், அரசுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் காரண மாக அமைந்துவிட்டன.

”உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாக திருந்தும்’ என்பதற்கமைய, தமிழ் மக்களாகிய அல்லது தமிழ்க் கட்சிகளாகிய நாம் தமிழ்த்தேசியத்திற்கு குந்தகம் விளைவிக்கின்றோமா என்பதை சிந்திக்கவேண்டும். உதவிசெய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது. அரசினைப் பொறுத்தவரையில், தற்போதைய நிலவரங்களின படி ருNP ஆட்சிக்கு வந்தால் என்ன? அல்லது ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தால் என்ன? ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன? தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரி மையை வழங்கப்போவதில்லை.
வடகிழக்கிலேயே தமிழ்மக்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்காத இவ்வரசு, முதலமைச்சரின் அதிகாரங்களையும் தாண்டி ஆளுநர் கையிலேயே அதிகாரங்கள் தங்கியுள்ளது எனலாம்.

ஆளுநரின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விடயங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பதாகவும், ஆளுநர் அரசாங்கத்தினால் மூளைச் சலவை செய்யப்படுகின்றார். இன்றைய காலகட்டத்தினைப் பொறுத்தவரையில், எம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால், தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றி வேறு வழியில்லை.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நாம் கடந்து போகவிருக்கின்ற அரசியல் நீரோட்டத்தில், எதிர் நீச்சல் போடுகின்றவர்களாக எமது பணி களை தொடர்வது சிறந்தது. அவ்வாறு செயற்படாவிடின் மீண்டும் இலங்கையரசு தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சூழ்நிலை உருவாகும்.

-இரணியன்-

SHARE