நவீன உலகில் பிள்ளைகளினுடைய வளர்ச்சியில் பெற்றோர்கள் கவனம் கொள்ள வேண்டும். கால்கோல் விழாவில் உரையாற்றிய திரு. ப. பரணிதரன் உதவிக்கல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு.

35

 

குழந்தைகளை நம்பி உங்களிடம் ஒப்படைப்பதற்காக பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். ஆகவே அன்பான ஆசிரியர்களே வரலாறுகள் தோமஸ் அல்வா எடிசனை காக்கலாம். ஆனால் அவரிற்கு பின்னால் இருந்த அம்மாவை, ஆசிரியரை உங்களுக்கு தெரியாது. தோமஸ் அல்வா எடிசன் பாடசாலையில் இருந்து திறத்தப்பட்ட ஒரு மாணவன் ஆனால் அந்த திறத்தப்பட்ட மாணவன் பெறுமதியான சேர்க்கையை வழங்கியது அவனுடைய அம்மா. ஆகவே ஆசிரியர்களே பெற்றோர்கள் முக்கியமானவர்கள். சமூக மாற்றங்கள் பல பிரதிபலிப்புக்களை தந்துகொண்டு இருக்கின்றன. பல தவறுகளை காட்டி நிற்கின்றன. இந்த வகையில் நான் வளர்ந்த காலத்தில் எனது பாட்டி நிலாவை காட்டி சோறூட்டினாள் அந்த சோற்றுடனே எனக்கு தமிழ் அமுது இனியதாக உள்ளே புகுந்தது. ஆனால் தற்பொழுது ரெடிமெட் சாப்பாடுகள் அடுப்படியிலே அம்மாக்கள் இருப்பதில்லை. அவர்கள் வேலைக்கு செல்லும் அவசரத்திலே பலவற்றையும் மறந்து விடுகிறார்கள். கருக்குடும்பத்தை நோக்கி நகர்ந்தன. கூட்டுக்குடும்பங்கள் தகர்ந்தன. பிள்ளைகள் பல இன்ப துன்பங்களை தாங்களே தமது திறன்களை இழந்த நிலையிலே இங்கு வருகிறார்கள். பொதுவாக இந்த குழந்தைகளுக்கு பெரும்பாலும் போனை காட்டி தான் சோறு ஊட்டி இருப்பார்கள். அன்ரைட் போன் இல்லையென்றால் இந்த பிள்ளைக்கு சோறு இருந்திருக்காது. சோறு சாப்பிட மாட்டார்கள். இப்படியானவர்கள் எங்களுடன் வரப்போகின்றார்கள். அந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படுத்தி பெரும்பாலும் அம்மாக்கள் பாஸ்போர்ட்டை வைத்து உங்களுக்கு பிள்ளைகளை அனுப்பியிருப்பார்கள். அவர்கள் அங்கே தான தர்மங்களை சொல்லிக்கொடுக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

எனவே இப்படியான பக்குவங்களோடு வருகின்ற பிள்ளைகளை பராமரிக்க வேண்டிய மகிழ்ச்சியாக்க வேண்டிய அவரை கூட்டுக்குள் வைக்காமல் அதாவது பெரும்பாலும் வீடு என்ற கூட்டிலே இருந்து வந்து பாடசாலை என்ற கூட்டில் அடைக்கின்ற என்ற நிலைப்பாட்டை மாறுபட்டு அவன் சுதந்திரமாக அவனது சிந்தனைகள் பரந்துபட்ட நாளைய தலைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக நாளைய சமூகத்தின் விஞ்ஞானியாக கொடுக்க வேண்டிய எங்களது தேவை ஒவ்வொருவரிடமும் உண்டு ஆகவே அன்பான ஆசிரியர்களே இந்த குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்க விடுங்கள். அவர்களுக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுங்கள் அவர்களுக்கு தர்மத்தை சொல்லிக்கொடுங்கள். சமூகத்தினுடைய நல்ல பிரஜையை கொடுப்பதற்காக உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ளலாம் . அன்பான ஆசிரியர்களே புதிய நுட்பங்களை பயன்படுத்தி உங்கள் தொழிற் கற்கை வாங்கைகளை மாற்றியமையுங்கள். உங்களின் கற்பித்தல் நுட்பங்களிலே புதிய தொழினுட்பங்களை புகுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் இவர்களை வென்றுகொள்ளுங்கள். அன்பான ஆசிரியர்களே மனதில் இருத்திக்கொள்ளுங்கள் உங்கள் வாங்கையை மேலும் மேலும் வளர்ப்பதற்காக இந்த குழந்தைகளுடைய எதிர்காலத்தை வளர்த்து நன்க திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்பான பெற்றோர்களே உலக மாறுதல் பழைய மாதிரி தோமஸ் அல்வா எடிசனை தேடமுடியாது. ஆனால் புதிய புதிய நுட்பங்களுக்கேற்ப குழந்தைகள் இங்கு தயார்ப்படுத்துவதற்கு நீங்கள் முற்றிலும் உதவி புரிய வேண்டும். கொண்டு வந்து வாகனங்கள் ஆட்டோக்கள் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வந்து தள்ளிவிட்டு ஓடாது உங்களுடைய கல்வி வளர்ச்சி பற்றி தினந்தோறும் அல்லது மாதந்தோறும் பாடசாலைகளில் நிகழ்த்தப்படும் அந்த கூட்டங்களிலே நீங்கள் கலந்து கொண்டு உங்கள் குழந்தைகளை வளப்படுத்திக்கொள்ளுங்கள். இது முக்கியமானதும் கூட பெரும்பாலும் பாடசாலைகளில் தள்ளி விட்டால் காணும் என்ற நிலை மாறி கற்றலுக்கான ஒழுங்குகளில் பெற்றோர்களும் இணைந்து கொள்ள வேண்டிய தேவை இந்த பராயத்திலே தேவை அவசியப்பாடு காணப்படுகின்றன. ஏனென்றால் புதிய நுட்பங்கள் புதிய தொழில் பெயர்ச்சி தன்மைகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பிள்ளைகளோடு ஆசியர்களும் மாணவர்களும் பெற்றோர்கள் இடையிலும் கல்வி சிந்தனை மாறிக்கொண்டு இருக்கின்றன. அடுத்த 2020 இல் மாறப்போகும் கல்வி மாற்றத்திலே உட்படுத்தப்படுகிறீர்கள். உங்களுடைய தேவை பாடசாலை மட்டத்தில் தேவைப்படுகிறது. அதனால் தற்பொழுது நீங்கள் பாடசாலைக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்றீர்கள். பாடசாலையிலே வகுப்பறைகளை தயார்ப்படுத்திக்கொள்ளுதல் வகுப்பறையிலே உங்களது பிள்ளைகளின் நிலைகளை அறிந்து கொள்ளுதல் என்பன முக்கியமாக்கப்பட்டிருக்கின்றது. சமூக மாற்றம் எவ்வாறு ஏற்படினும் அந்த சமூக மாற்றத்திற்கேற்ப நாங்கள் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நீங்கள் தினந்தோறும் பத்திரிகைகளிலே பார்க்கின்ற விடயங்கள் பகீரங்கமாகவே நாங்கள் சொல்லமுடியாமல் இருக்கின்றோம் மனவருத்தமாக இருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட விடயங்கள் பொறுத்தமற்றவையாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இந்த பாடசாலைகள் பிரசுரிக்கின்ற மாணவ சமூகம் தொழில் துறைக்கேற்ப தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள முடியாமல் காணப்படுகின்றது. அதாவது ஸ்கில்ஸ் டெவலெப்மென்ட் போதுமானதாக இல்லை. போதுமான அறிவோடு குழந்தை வெளியே கொண்டு செல்லப்படுகிறான். நீங்கள் அனைவருமே ஆழ்ந்த உயர்ந்த கற்பனையிலே வந்திருப்பீர்கள் அனைவரது சிந்தனையிலுமே இருக்கும் நான் அவனை கொண்டு வந்து விட்டேன். ஆவன் வைத்தியனாக வருகின்றான், ஒரு பொறியியலாளனாக வருகின்றான், அவன் ஒரு கணக்காளனாக வருகின்றான் யாருமே சிந்திப்பதில்லை எனது குழந்தை ஒரு நல்ல பிரஜையாக வருகின்றான் என்பதை. அது பற்றி சிந்திப்பதற்கு நேரமும் கிடைப்பதில்லை. விரைவான உலகம் விரைவான உலகத்திலே எங்களை தயார்ப்படுத்திக் கொள்வதா உழைப்பை பேணிக்கொள்வதா என்ற பெரும் மனதோடு தான் இங்கு வருகின்றோம். ஆகவே குழந்தைகளே பெற்றோர்களே ஆசிரியர்களே வயிற்றுக்கு சோறு மனதுக்கு உணர்வு வாழ்க்கை வளம் பெற கல்வி அவசியம் ஆனால் கல்வி என்பது எப்படி அமைய வேண்டும் என்பதிலே பல நெருக்கடிகளையும் மாற்றுக் கருத்துக்களையுமே கொண்டுள்ளீர்கள். நான் உங்களிடம் வேண்டிக்கொள்வது அன்பான பெற்றோர்களே குழந்தைகளை சமூகத்தை நேசிக்கின்ற ஒருவனாக சமூக பாங்குடையவனாக வெளியிலே அனுப்புங்கள். அதாவது நான் என்ற எனது குடும்பம் என்ற பார்வையிலே எனது சமூகம் சமூகத்தினுடைய வளர்ச்சி என்ற போர்வையுடன் பிறந்தே நீங்கள் வளர்த்தெடுப்பீர்களாக இருந்தால் உங்களுடைய குழந்தை அடுத்த நூற்றாண்டில் ஒரு தலைவர் அடுத்த நூற்றாண்டின் ஒரு கால்மாக்ஸ் அடுத்த நூற்றாண்டினுடைய ஒரு அரிஸ்டோட்டில் உங்கள் குழந்தையாகவே இருப்பார். ஆகவே எதிர்கால உங்கள் குழந்தையுடைய வாழ்க்கை வளம்பெற செய்வது தனியே எங்கள் கல்வி சமூகத்திடம் மாத்திரமல்ல பெற்றோர் சமூகத்திடமும் அது இருக்கின்றது என்ற இந்த கருத்தை முன்வைத்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

SHARE