மீண்டும் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி – நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க

33

நாட்டின் முக்கிய அரச பதவிகளில் ராஜபக்ஷ குடும்பத்தினரே நியமிக்கப்பட்டதன் ஊடாக மீண்டும் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி தொடர்கிறதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் பிமல் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக  பரவலாக கருத்துக்களை  வெளியிட்டு வந்தது.

ஆனால் தற்போது ஆட்சிபூடம் ஏறியவுடன் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பின் வாங்குகின்றது.

அதாவது மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை தேவையற்றது என்று கூறுவதன் ஊடாக மஹிந்த அணியினரும் தொடர்புபட்டிருக்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவேதான் மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நாம் வலியுறுத்தினோம்.

அத்துடன் நாட்டின் சில முக்கிய அரச சேவைகளில் ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக ராஜபக்ஷவின் குடும்ப  ஆட்சி மீண்டும் தொடர்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE