மீண்டும் ஆரம்பிக்கப்படும் மத்தள சர்வதேச விமான நிலையம்

53

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மாத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்கவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.

SHARE