இந்தியன் 2 படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்

63
கமலுக்கு வில்லியாக காஜல் அகர்வால்?
கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் – ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி தொடங்கியது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிலகட்ட படப்பிடிப்புக்கு பின்னர் கமலுக்கு நடந்த ஆபரே‌ஷன் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. கமல் தற்போது உடல்நலம் தேறிவிட்டதால் பிப்ரவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவர் வயதான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
காஜல் அகர்வால்காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படத்தின் வேடம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என கேட்க வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூற முடியாது’ என கூறியுள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் வில்லி வேடம் என தகவல் பரவி வருகிறது.
SHARE