விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்

43

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சரி தற்போது முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகாவும், செக் குடியரசின் மேரி பவுவ்ஸ்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என நவோமி ஒசாகா கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய நவோமி ஒசாகா செட்டை 6-4 என போராடி கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
…………

இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், ரஷ்யாவின் அனஸ்தேசியா பொட்டபோவாவும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை எவ்வித அழுத்தமும் இல்லாமல் 6-0 என செரீனா வில்லியம்ஸ் எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா, செட்டை 6-3 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
……………

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரும், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய ரோஜர் பெடரர், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
………..

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ்வும், ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸ்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களை குதுகலப்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை மார்டன் 6-3 என கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மார்டனுக்கு டெனிஸ் ஷாபோலோவ், கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.

இதில் சிறப்பாக விளையாடிய டெனிஸ் ஷாபோலோவ் செட்டை 7-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது செட்டை மார்டன், 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

இதனால் நான்காவது செட் பரபரப்படைந்தது. இந்த செட்டிலும் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியதால் செட் டை பிரேக் வரை நீண்டது.

இதில் சிறப்பாக விளையாடிய மார்டன், 7-6 என செட்டைக் கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
……………

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், சகநாட்டு இளம் வீராங்கனையான கோகோ கோஃப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில் முதல் செட்டே இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்தியது. இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.

இதில் விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய கோகோ கோஃப், செட்டை 7-6 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய கோகோ கோஃப், செட்டை 6-3 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

………..

இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும், அமெரிக்காவின் கிறிஸ்டீ அன்னும் மோதினர்.

இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை 6-1 என வோஸ்னியாக்கி கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில். தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய வோஸ்னியாக்கி செட்டை 6-3 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

………….

மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லீ பார்டியும், உக்ரைனின் லெசியா சுரேன்கோவும் மோதினர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என லெசியா சுரேன்கோ போராடி கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக மீண்டெழுந்த ஆஷ்லீ பார்டி, 6-1, 6-1 என்ற கணக்கில் எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
…………

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்சும், இத்தாலியின் சால்வடோர் கருசோவும் மோதினர்.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
…………..

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் சமந்தா ஸ்டோசூரும், அமெரிக்காவின் கேட்டி மெக்னலியும்  பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் கேட்டி மெக்னலி வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
………….

இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ்சும், சீனாவின் ஸாங் ஷுவாய்யும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து சுதாகரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடிய ஸாங் ஷுவாய், 7-5, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
…………….

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஜேர்மனியின் ஜென்- லெனார்ட் ஸ்ட்ரஃப்பும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.

டை பிரேக் வரை நீண்ட இந்த செட்டில், நோவக் ஜோகோவிச் 7-6 என செட்டைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிச், செட்டை 6-2 என கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், சிறப்பாக விளையாடிய ஜென்- லெனார்ட் ஸ்ட்ரஃப், செட்டை 6-2 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச், செட்டை 6-1 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
………….

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை எதிர்கொண்டார்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று ரோஜர் பெடரர், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE