சஜித்திற்கு ரணில் உட்பட ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு

55

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் ரணில் உட்பட ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் கூட்டணியின் தலைமைத்துவத்தை கொண்டு செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மாத்திரம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE