சுவிஸ் தூதரக பெண் ஊழியரின் தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

65

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான முன்னெடுப்புக்கள் யாவும் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் ஊடாக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

SHARE