ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்ற ஒசாகா – ஆஷ்லே பார்டி

40
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஆஷ்லே பார்டி, ஒசாகா 3-வது சுற்றுக்கு தகுதி

ஒசாகா – ஆஷ்லே பார்டி
கிராண்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவருமான ஆஷ்லே (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சுலோவெனியாவை சேர்ந்த ஹெர்சாக்கை எதிர் கொண்டார்.

இதில் ஆஷ்பார்டி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் இருப்பவரும் நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 2-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஜெங்கை எதிர் கொண்டார். இதில் ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

உலகின் 8-வது வரிசையில் உள்ள பெட்ரோ சிவிட்டோவா (செக்குடியரசு) 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த படோசவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் பெட்ரா மேட்ரிக் (குரோஷியா), வோஸ்னியாக்சி (டென்மார்க்) கெனின் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

உலகின் 6-ம் நிலை வீரரான ஸ்டெபான்ஸ் சிட்சி பாஸ் (கிரீஸ்) 2-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த பிலிப்பை சந்திக்க இருந்தார். பிலிப் காயத்தால் விலகியதால் சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சாம்குயரி (அமெரிக்கா) 7-6 (7-2), 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் பெர்னாசிசை (லிதுவேனியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

SHARE