திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவல்

57

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்பு பரவல் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE