திருகோணமலை துறைமுகத்தில் கப்பல்களை ஈர்க்கும் நடவடிக்கை

63

சர்வதேச கடல் எல்லையில் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து பயணிக்கும் கப்பல்களை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இவ்வாறு பயணிக்கும் கப்பல்கள் தொடர்பாக ஆராயும் கட்டமைப்பு செயலிழந்துள்ள நிலையில் உடனடியாகத் திருத்தியமைக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பணித்துள்ளார்.

சர்வதேச கடல் எல்லையில் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து பெருமளவிலான கப்பல்கள் பயணிக்கின்றன. இக்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஈர்த்துக்கொள்வது துறைமுகத்தின் கடமையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைதராது அதனைக் கடந்துச் செல்லும் கப்பல்கள் தொடர்பாக கணக்கெடுப்பொன்றை முன்னெடுத்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலை துறைமுகம் என்பது இலாபமீட்டக் கூடிய துறைமுகமாகும். இத்துறைமுகத்தை இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றியமைப்பது அத்தியாவசிய காரணியாகும்.

இக்கடல் எல்லையினைக் கடந்துச் செல்லும் கப்பல்களை திருகோணமலை துறைமுகத்திற்கு ஈர்த்துக்கொள்ளும் பொருட்டு பல்வேறுப்பட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடல் பாதை, கப்பல் தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு Radar Navigation System மற்றும் Vessel Traffic Monitoring System ஆகிய தகவல் திரட்டுக் கட்டமைப்புகளை துறைமுக வளாகத்திற்குள் பொருத்தியுள்ள போதிலும் மென்பொருள் கோளாறு காரணமாக இக்கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

துறைமுகத்தின் வினைத்திறனான செயற்பாடு மற்றும் அபிவிருத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் இக்கட்டமைப்பினை 2 மாதங்களுக்குள் உயர் தொழில்நுட்பத் திறனுடன் தரமுயர்த்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

SHARE