காதலனால் கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலை சிங்கள மாணவி

82

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப்பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(புதன்கிழமை) நண்பகல் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பண்னையில் கொலையானவர் பேருவளையை சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது 29) எனும் யாழ்.மருத்துவ பீட மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

SHARE