வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்களுக்கு சிவசக்தி ஆனந்தனால் நிதி ஒதுக்கீடு

39

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முப்பத்து மூன்று வேலைத்திட்டங்களுக்கு நாற்பத்து இரண்டு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால்  ஒதுக்கீடு!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2018ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முப்பத்து மூன்று வேலைத்திட்டங்களுக்கு சுமார் நாற்பத்து இரண்டு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு இன்று (22.01.2019)பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், வவுனியா நகர சபை தலைவர் கெளதமன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தியாகராசா பிரதேச மற்றும் நகர சபை உறுப்பினர்கள்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான றேகன்,தயாளன்,பாபு மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட கமிற்றி உறுப்பினர்கள் பரமேஸ்,உதயன்,றூபன் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

SHARE