பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி

36
பெரு நாட்டில் பேருந்து விபத்து- 6 பேர் பலி
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பேனமெரிக்கானா சூர் நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டேம்பில்லோ அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருவில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டில் கார் விபத்துகளில் 717 பேர் பலியாகி உள்ளனர்
SHARE