இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் 7 மணி நேர வித்தியாசம்

35
7 மணி நேரம் வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம்: விராட் கோலி சொல்கிறார்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-ந்தேதி) நடைபெற்றது.

இந்த போட்டி முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. இதற்குள் இந்தியா நியூசிலாந்து செல்ல வேண்டும்.

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நேர வித்தியாசம் 7 மணி நேரமாகும். நான்கு நாட்களுக்குள் ஏழு மணி நேர வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்று பயணம் செய்து வரும்போது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஏழு மணி நேர வித்தியாசத்தை உடனடியாக அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம். வரும் காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் ஆலோசிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்.

நியூசிலாந்து பயணத்துக்கு முன் நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினோம். அப்போது நாங்கள் அதிக நேரம் மைதானத்தில் செலவழித்தோம். ஆனால், அதற்கு முன் சில டி20 போட்டிகளில்தான் விளையாடினோம். டி20-யை விட அதிகமான போட்டிகளில் விளையாடியதால் இங்கே தயாராகுவதற்கான நேரமை் குறைவான இருந்தாலும் எளிதான வழியை கண்டு பிடிப்போம்.

இந்த தொடரை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த வருடம் உலக கோப்பை தொடர் இருப்பதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமானது.

இந்த சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்து மிக மிக வலிமையான அணி. சொந்த மண்ணில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆடுகளம் எப்படி செயல்படும் உள்ளிட்ட முக்கியம்சங்களை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்.

சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவது சற்று சாதகமாக இருந்தாலும், நாங்கள் நியூசிலாந்து மண்ணில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடந்த முறை நாங்கள் இங்கே இரண்டு தொடர்களையும் வென்றுள்ளோம். அதனால் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்வோம்’’ என்றார்.

SHARE