ரஜினிக்கு மாப்பிள்ளையாக , கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சித்தார்த்

60
ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா?

கீர்த்தி சுரேஷ், ரஜினி
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார்.
சித்தார்த்
தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். குஷ்பு வில்லத்தனம் கலந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் படத்தில் சித்தார்த்தும் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ரஜினிக்கு மாப்பிள்ளையாக அதாவது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
SHARE