நடிப்பை இடைநிறுத்துவதற்கு முடிவு செய்த எமி ஜாக்சன்

25
நடிப்புக்கு முழுக்கு போடும் எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்
மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு சென்றார். பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு எமி ஜாக்ஸன் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டார். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ‘இன்றுடன் 4 மாதம் ஆகிறது. நீ எனக்கு குழந்தையாக பிறப்பதற்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது.
எமி ஜாக்சன்நீ ஒரு அதிசயமான குழந்தை. உனக்கு அம்மாவாக இருக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். குழந்தை பெற்ற பிறகே திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்த எமி தனது பாய் பிரண்டை எப்போது மணக்கப்போகிறார் என்பதுபற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. புதிய பட வாய்ப்புகளும் எதுவும் தேடி வராத நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆகிவிட்ட எமி ஜாக்சன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
SHARE