இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான்

27

கடந்த போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பது தெளிவாக தெரிகின்றது. காரணம் என்னவென்றால் தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கின்ற ஆயுத கட்சிகளும் அகிம்சை கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என ஊடகங்களின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இவ் நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையென்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லையென்றும் தெரிவித்திருக்கின்ற விடயமானது அரசியல் தமிழ் மக்களையும் விசனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. இவ்வாறான கருத்தினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்த அடுத்த கனமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் போராட்ட களத்தில் இறங்கி இருக்க வேண்டும்.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அதைவிட விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த முக்கியமானவர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் நேரடி சாட்சியங்களும் இருக்கின்றன. இவ்வாறான சூழ் நிலைகளில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது மேலும் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி விரக்தி கொள்ள வைக்கும் செயலாகும். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இராணுவத்தினரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்னி யுத்தத்தில் மடிந்து போனார்கள் என்பது தான் வரலாறு. நிலைமை இவ்வாறிருக்க அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியாக இருக்கிறது. மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டம் இடம்பெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் இனப்படுகொலை இடம்பெற்றதா என வாத பிரதிவாதங்கள் இடம்பெற இருக்கிறது. தமிழர் தரப்பில் இது தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் சவேந்திர னு.சில்வா 58வது படைப்பிரிவு, ஜெகத் டயஸ் 57வது படைப்பிரிவு, கமால் குணரத்ண 53வது படைப்பிரிவு, பிரசன்ன னு.சில்வா 55வது படைப்பிரிவு, நந்தன உகந்த 59வது படைப்பிரிவு இவர்கள் தமிழின படுகொலையின் முக்கிய சூத்திர தாரிகளாக பெயர் பதிக்கப்பட்டுள்ளன. ஆகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பாக மேல் குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.

SHARE