தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைவடைய செய்யும் கட்சிகள் அனைவரும் தமிழின துரோகிகள்

25

ஒரு நாட்டில் விடுதலை அரசியலை நோக்கி போராடிய ஆயுத கட்சிகள் பதவி மோகத்தில் களம் இறங்கியவர்கள் அல்ல மாறாக அவர்கள் தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்த வந்தவர்களும் அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களின் ஆயுதப் போராட்டத்தை திசைதிருப்பி விட்டது எனலாம்.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் ஆயுத போராட்டங்கள் மௌணிக்கப்படுவதற்கு முன்பே தமக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கி கடல், வான், தரை என முப்படைகளையும் கொண்டிருந்தனர். அதே உத்வேகத்தில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை மீட்டு எடுக்கும் போர் தந்திர உபாயங்களையும் மேற்கொண்டனர். பின்னர் இவர்களின் அரசியல் கட்சி வலுவான நிலை கொண்டிருக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இதன் முக்கிய பங்கு ஊடகவியலாளர் சிவராம் அவர்களையே சாரும். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு அளவில் இடைக்கால நிர்வாகத்துடன் கூடிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் வடக்கு கிழக்கில் வலுவான ஒரு கட்டமைப்பை நிலைப்படுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை கைப்பற்றியது. தற்பொழுது 13 ஆசனங்களாக பின்னடைவை சார்ந்துள்ளது. ஆகவே கூட்டமைப்பை பலப்படுத்த அனைத்து ஆயுத கட்சிகளும் தமிழ் தரப்பும் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லையானால் துரோகிகள் தொடர்ந்தும் களைபுடுங்க நேரிடும்.

SHARE