இங்கு குப்பைமேடு மக்கள் வாழும் சூழல் இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும்-பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம்

63

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரின் கூற்று மடத்தனமானது என பாராளுமன்றில் ரிசாட் பபதியுதீன் நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய உரைக்கு இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் வழங்கும் போதே வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

தொடர்நது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர்,
பம்பைமடு குப்பைமேடு தொடர்பாக நேற்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், நான் தற்போது குடியேறிய மக்கள் என தெரிவித்தமையி

னையை ஒரு மடமைத்தனமாக விடயமென கூறியிருந்தார். இவ்விடயம் எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கும் விடயமாகவுள்ளது.

அவர் ஒர் விடயத்தினை கூறியிருந்தார். எதோ ஒரு இடத்தில் குடியேறி இருந்தவர்கள் மீள்குடியேறிய பின்னர் அங்கு வேறு மக்கள் குடியேறிருந்தமையினால் இங்கு குடியேற்றம் செய்ததாக, அந்த மக்கள் 20 வருடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தாலும் கூட ஒரு குடியேற்றம் நடத்த முன்பு அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் .

இது ஒரு குப்பைமேடு இங்கு மக்கள் வாழும் சூழல் இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும். அந்த குப்பை மேடு இருக்கின்ற விடயம் தெரிந்தும் மக்களை அந்த இடத்தில் குடியேற்றி அந்த மக்களை நோயாளிகள் ஆக்கும் விடயமாகவே நான் இதனை கருதுகின்றேன்.

அத்துடன் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பல வருடங்களாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அந்த மக்களுடைய பிரதான பிரச்சனையான குப்பை விடயத்தினை பெரிதாக எடுக்கவில்லை. அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தால் தெரியும் காபட் வீதிகளும் தார் வீதிகளும் மாத்திரமே அமைத்து வழங்கியுள்ளார்.

உண்மையிலேயே அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது பல தடவைகள் குப்பைகளை அகற்றுவதற்கு 200 மில்லியன் ரூபா தருவதாகவும் அதற்குறிய விடயங்களை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இன்னுமொரு விடயத்தினை தெரிவித்திருந்தார். பிரதேச சபை, நகரசபை, பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் இதற்கு வாக்குறுதி அளித்ததாக அவரும் அந்த மேசையில் இருந்து கதைத்த விடயம்.

குப்பை மேடு இருக்கின்ற பகுதியிலிருந்து 500 மீற்றர் தள்ளிச் செல்வதற்கு அதற்குரிய நிதியினை ஒதுக்கித் தரவேண்டும் என்ற விடயத்தினையே நாங்கள் முன்வைத்திருந்தோம்.

வவுனியாவில் பல்வேறு கிராமங்களில் 40 தொடக்கம் 50 வருடங்களாக வாழ்கின்ற மக்களுக்கு இன்று வரை காணிகளுக்குரிய உரிமைப்பத்திம் வழங்கப்படவில்லை.

ஆனால் இங்கு சாளம்பைக்குளம் பகுதியில் (குப்பை மேட்டுக்கு அருகே) தற்போது குடியேறியுள்ள மக்களுக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் காணிகளுக்கு கூட இது வரை உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் என்னை ஒரு மடமைத்தனமானவர் என்று குறிப்பிடுவது உண்மையிலேயே அவருக்குத்தான் பொருத்தமாக அமையும்.

அந்த மக்களை குப்பைமேட்டில் குடியேற்றி, மக்களை கிணற்றில் தள்ளிவிட்டு இன்று அவர்களுக்குரிய சுகாதார பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கின்றார்.

இவர் பல வருடங்காக அமைச்சராக இருந்துள்ளார். அப்போது மக்களுக்குரிய தீர்வினை வழங்காது நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.

ஆனால் இரண்டு மாத காலத்திற்கு முன்வந்த அரசாங்கத்திற்கு முன்வைக்கின்ற கோரிக்கையினை இவர் இவ்வளவு காலமாக அமைச்சராக இருந்த சமயத்தில் தீர்வினை எடுத்திருக்கலாம்.

ஆகவே இவ்வாறான விடயங்களை முன்னாள் அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். போ ராட்டங்கள் நடாத்தியோ அல்லது தடை விதித்தோ குப்பைமேடு பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இதற்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என நான் முன்னாள் அமைச்சருக்கு கூறிவைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

thinappuyalnews.com

வவுனியா சாம்பல் குளம் மக்கள் எதிர்நோக்கும் குப்பபை பிரச்சனை -குடிமனை முதலில் வந்ததா குப்பை முதலில் கொட்டப்பட்டதா? முஸ்லீங்களை அவ்விடத்தில் குடியேற்றிய அரசியல் வாதிகளே இன்றைய வடமாகாண ஆளுனர் திருமதி சால்ஸ் அவர்களே உங்கள் கவனத்திற்கு

Posted by Thinappuyal News on Jumaat, 24 Januari 2020

வவுனியா சாலம்பை குளம் மக்கள் நீதி வேண்டி அடையாளபோராட்டம்

குப்பை கொட்டும் இடமாக இப்பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை தவிர்த்து வேறு இடங்களுக்கு மாற்றக்கோரி இவர்கள் தொடர்ந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் உரிய அனுமதி பெறப்படாது இந்த குடியேற்றம் அரசியல் வாதிகள் தற்போதைய வடக்கின் ஆளுனர் திருமதி சார்ல்ஸ் அவர்களால் அனுமதிக்கப்பட்டதாயும் அப்பிரதேச முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

எது எவ்வாறாக இருப்பினும் மக்களை அரசியல் வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியதாக அறிய முடிகிறது உரிய முறையில் அனுமதி பெற்றிருந்தால் குப்பை கொட்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புக்கள்
இல்லை முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்
பாராளுமன்றத்தில் இப்பிரதேச மக்களுக்காக
குரல்கொடுக்க போய் குறித்த பிரதேச சபை தலைவரை சுரன்டிப்பார்க்கப் போனமையினாலே
குப்பை கொட்டும் பிரச்சனை பாரிய அளவில் வெடித்தது எனலாம் என்னும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அம்மக்களுக்கான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு முஸ்லீம்கள் வாழுகின்ற பகுதிகளில்
தான் குப்பை கொட்டும் பிரச்சனைகள் அதிகம் எனலாம்

SHARE