ஐபோன் எஸ்.இ. 2 ரென்டர்

373
இணையத்தில் லீக் ஆன ஐபோன் எஸ்.இ. 2

ஐபோன் எஸ்.இ. 2 ரென்டர்
ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோனில் எல்.சி.டி. ஸ்கிரீன், 3டி டச் அம்சம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் வெளியாக இருக்கிறது.
புதிய ஐபோன் எஸ்.இ. 2 பார்க்க ஐபோன் 8 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இதில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, பின்புறம் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 8 மாடலில் கிளாஸி பேக் வழங்கப்பட்டது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
ஐபோன் எஸ்.இ. 2  ரென்டர்
பிரைமரி கேமராவில் 12 எம்.பி. சென்சாரும், முன்புறம் 7 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் மற்றும் அதிக பேக்கப் வழங்கும் பேட்டரியை எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் எஸ்.இ. 2 பெயரில் வெளியிடப்படுமா அல்லது ஐபோன் 9 பெயரில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஐபோன் எஸ்.இ. 2 இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் புதிய ஐபோன் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE