அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

51
அருண்ராஜா காமராஜின் அடுத்த படம் இவருடன்தான்?

அருண்ராஜா காமராஜ்
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. இவரது அடுத்த படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. விஜய்யின் 65 வது படத்தை இவர் இயக்குவதாக கூறப்பட்டது. இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை.
உதயநிதி ஸ்டாலின்இந்நிலையில்,  அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE