ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு நன்கொடை வழங்கிய பிவி சிந்து

103
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நன்கொடை

பிவி சிந்து
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான வகையில் பரவி வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் உச்சக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் முடிந்த அளவிற்கு அந்தந்த மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
SHARE