இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

83
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு

நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள ஜெயப்புரா மாவட்டத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.

எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

இந்தோனேசியா நாடு புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE